தென் கொரியாவில் 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் துருக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற முக்கிய காரணமாக விளங்கியவர் ருஸ்து ரெக்பர். கோல்கீப்பரான இவர் அந்தத் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதைத்தொடர்ந்து, தென் கொரிய அணிக்கு எதிரான மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இவரது சிறப்பான கோல்கீப்பிங்கால் துருக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இவரது சிறப்பான ஆட்டத்தால், 2003ஆம் ஆண்டு பார்சிலோனா அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு, பெசிக்டாஸ் உள்ளிட்ட கிளப் அணிகளுக்கு விளையாடிய இவர், 2012இல் பின்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
இந்நிலையில், 46 வயதான இவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மனைவி கூறுகையில், அவருக்கு கரோனா அறிகுறி சாதாரணமாக இருந்த நிலையில், திடீரென மோசமான நிலையை எட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. எனக்கும் எனது மகனுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனையில் தொற்று இல்லை என்றார்.
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் துருக்கியில் ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘கோவிட் -19 வைரசால் மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தது’ - டிபாலா