ஐ லீக் கால்பந்து தொடரில் மோகன் பாகன் அணியை வழி நடத்தியவர் ஸ்டிரைக்கர் சுபா கோஷ். இந்நிலையில், சுபா கோஷ் தனது அறிமுக ஐஎஸ்எல் சீசனுக்காக காத்திருந்தார். அதன்பின் மோகன் பாகன் அணி, ஏடிகேவுடன் இணை நடப்பு ஐஎஸ்எல் தொடரை சந்தித்து வருவதால், அந்த அணியில் சுபா கோஷ் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சுபா கோஷை தனது அணிக்காக ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், நட்சத்திர ஸ்டிரைக்கர் சுபா கோஷ் ஈடிவி பாரத்துடன் சிறப்பு உரையாடலில் பங்கேற்றார். சுபா கோஷின் சிறப்பு உறையாடல்..,
-
ANOTHER ONE! 😍
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Welcome to the KBFC Family, Subha Ghosh!
The young forward is ready to don 🟡 till 2023 ✍️#SwagathamSubha #YennumYellow pic.twitter.com/fiwMOAv7Xa
">ANOTHER ONE! 😍
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) December 29, 2020
Welcome to the KBFC Family, Subha Ghosh!
The young forward is ready to don 🟡 till 2023 ✍️#SwagathamSubha #YennumYellow pic.twitter.com/fiwMOAv7XaANOTHER ONE! 😍
— K e r a l a B l a s t e r s F C (@KeralaBlasters) December 29, 2020
Welcome to the KBFC Family, Subha Ghosh!
The young forward is ready to don 🟡 till 2023 ✍️#SwagathamSubha #YennumYellow pic.twitter.com/fiwMOAv7Xa
கேள்வி: ஏ.டி.கே மோகன் பாகானை விட்டு வெளியேறுவது எவ்வளவு கடினமாக இருந்தது?
சுபா கோஷ்: அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு நேரம் என்பது முக்கியமானது என்று நம்புகிறேன். ஏடிகே மோகன் பாகன் அணியில் பல தேசிய வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் அணியில் இணைந்து விளையாட என்னக்கு இன்னும் அனுபவத்தை பெறவேண்டும்.
முதலில் நான் ஏடிகே மோகன் பாகன் அணியில் நிச்சயம் இடம்பெறுவேன் என்று தான் நம்பினேன். ஆனால் அணி தேர்வாளர்களை என்னால் ஈர்க்க முடியவில்லை. மோகன் பாகன் நான் வளர்ந்த கிளப். அதனால் அந்த அணியை விட்டு வெளியேறி, வேறொரு அணியில் விளையாடுவது எனக்கு கடினமாக இருந்தது.
கேள்வி: ஷியாம்நகரின் கால்பந்து கலாசாரம் உங்களை இந்த விளையாட்டை மேற்கொள்ள ஊக்குவித்ததா?
சுபா கோஷ்: எனது 5 வயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் இருக்கிறேன். எனது தந்தை கால்பந்து போட்டிகளுக்கு அழைத்துச் சென்று இவ்விளையாட்டிற்கான அடிப்படைகளை எனக்கு கற்றுக்கொடுத்தார். மேலும், கொல்கத்தாவில் வளர்ந்ததன் மூலம் கால்பந்து விளையாட்டு எனது ரத்தத்தில் ஊறிய ஒன்றாக மாறிவிட்டது.
கேள்வி: நீங்கள் சிறுவயது முதலே மோகன் பாகன் அணியின் பல்வேறு வயது குழுக்களுக்காக விளையாடிவுள்ளீர்கள். உங்கள் அனுபவத்தைப் பற்றி கூறுங்கள்?
சுபா கோஷ்: எனது சிறுவயது முதலே மோகன் பாகன் அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். மேலும் ஐ-லீக் ஜூனியர் தொடர்களில் நான் இந்த அணிக்காக பங்கேற்றது எனக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது. ஏனெனில் இதுபோன்ற புகழ்பெற்ற கிளப்பில் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷடம். எனக்கு வாய்ப்பளித்ததற்காக நான் மோகன் பாகன் அணிக்கு கடமைப்பட்டுள்ளேன்.
பின்னர் நான் மோகன் பாகனைவிட்டு செல்வதற்கான நேரம் வந்தது. அப்போது நான் என் தந்தையிடம் இதுகுறித்து கூறினேன். அது அவருக்கும் கடினமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், சிறுவயது முதலே மோகன் பாகனுக்காக விளையாடி, ஒரு பிணைப்பை உருவாக்கியிருந்தேன். தற்போது மோகன் பாகனிலிருந்து வெளியேறிவிட்டேன் என்பது தெரியும், ஆனாலும் என்னுடைய பிணைப்பு என்றென்றும் இருக்கும்.
இருப்பினும், தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளேன் என்று உணர்கிறேன். ஏனெனில் நான் ஒரு கால்பந்து வீரராக வளர வேண்டும். அதற்காக பல போட்டிகளில் விளையாடுவது அவசியம். இப்போது கேரளா பிளாஸ்டர்ஸ் மூலம் எனது கனவை என்னால் அடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
கேள்வி: பயிற்சியாளர் கிபு விக்குனா உங்கள் விளையாட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்?
சுபா ஜோஷ்: கடந்த சீசன் வரை ஜூனியர் வீரராக இருந்தேன். ஜூனியர் அணியில் இன்னும் ஒரு சீசனில் விளையாடுவதை நான் எதிர்பார்த்தேன். அப்போது நான் கிபு விக்குனாவை கண்டதும் இனி வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று தென்றியது.
அவரது பயிற்சியின் போது தான் நான் எனது அணியினருடன் சேர்ந்து, சீனியர் அணியுடன் பயிற்சியில் சேர்ந்தேன். அதன்படி கோவாவில் நடைபெற்ற முந்தைய சீசன் முழுவதும் நான் சீனியர் அணியுடன் பயிற்சி பெற்றேன். பயிற்சி முடிந்ததும் எனக்கு சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். அதனை உருவாக்கித் தந்தவர் பயிற்சியாளர் கிபு.
ஏனெனில் அவர் எப்போது என்னை ஊக்குவித்தார். அவரது பயிற்சியின் கீழ் எனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது. அவரது உதவியின் காரணமாக நான் தற்போது கேரளா பிளாஸ்டர்ஸ் அணியில் விளையாடவுள்ளேன்.
கேள்வி: இந்த சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் தொடர்ந்து போராடி வாருகிறது. இது உங்களுக்கான ஒரு புதிய சவால். அதற்கு நீங்கள் தயாரா?
சுபா கோஷ்: கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தற்போதுள்ள நிலை அவ்வளவு மோசமானதல்ல என்று நினைக்கிறேன். ஏனெனில் கால்பந்து விளையாட்டில் மாற்றங்களைச் செய்வதற்கு நேரம் எடுக்கும். சீசன் முன்னேறும் போது எங்கள் அணி நிச்சயம் முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இது ஒரு சவால். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது நான் எனது சவாலை முறியடிப்பேன்.
கேள்வி: இந்திய கால்பந்தின் எதிர்காலம் என உங்களைப் பலரும் கூறுகின்றனர். இந்த எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை நீங்கள் உணர்கிறீர்களா?
சுபா கோஷ்: நானும் அவ்வாறு தான் இருக்க விரும்புகிறேன். நான் எனது தனிப்பட்ட விளையாட்டை தவிர்த்து, அணியின் வெற்றிக்காக போராடவேண்டும். இதன் விளைவாக நான் உணரும் ஒரே அழுத்தம் எங்களது அணி வெல்ல வேண்டும் என்பது மட்டும் தான்.
கேள்வி: உங்கள் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் ஐ.எஸ்.எல் எவ்வாறு உதவுகிறது?
சுபா கோஷ்: என்னைப் போன்ற கால்பந்து வீரர்களுக்கு ஐஎஸ்எல் என்பது மிகப்பெரிய ஒரு தளமாகும். ஏனெனில் இத்தொடரில் வீரர்களுக்கான வசதிகள் உயர்தரமானது. இதனால் ஒவ்வொரு வீரருக்கும் இத்தொடர் சிறந்ததை வழங்குகிறது. மேலும் வீரர்களாகிய நாங்கள் ஐஎஸ்எல் தொடரின் மூலம் மிகவும் பாரட்டப்படுகிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இனவெறி பாகுபாட்டை ஏற்க முடியாது' - டேவிட் வார்னர்