ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து(Euro 2020) போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் நேற்று(ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி குரேஷியா ஆணியை எதிர்கொண்டது.
வெற்றி கோல் அடித்த ரஹீம் ஸ்டெர்லிங்
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட எந்த முயற்சியும் எடுபடவில்லை. இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் வேகத்தை இங்கிலாந்து அணி தீவிரப்படுத்தியது.
இதன் பலனாக, 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் முன்கள வீரர் ரஹீன் ஸ்டெர்லிங் அணிக்கு முதல் கோலை தேடித்தந்தார். அந்த கோலே ஆட்டத்தின் வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்டத்தின் இறுதியில் 1-0 என்றக் கணக்கில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
-
🏴 Raheem Sterling continues his fine form for England 🔥@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/KqJuJb9qW1
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🏴 Raheem Sterling continues his fine form for England 🔥@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/KqJuJb9qW1
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021🏴 Raheem Sterling continues his fine form for England 🔥@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/KqJuJb9qW1
— UEFA EURO 2020 (@EURO2020) June 13, 2021
மற்ற ஆட்டங்களின் முடிவுகள்
குரூப்-சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் மேசிடோனியாவை வென்றது. அதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் உக்ரைன் அணியை வென்றது.
இன்றைய ஆட்டங்கள்
ஜூன் 14 நடைபெறும் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணி செக் ரிபப்ளிக் அணியை எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டியில் போலாந்து அணி ஸ்லோவக்கியா அணியையும், மூன்றாவது போட்டியில் ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: பிரெஞ்ச் ஓபன் 2021- புதிய வரலாறு படைத்த ஜோகோவிச்!