ETV Bharat / sports

இறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் கால்பந்து அணி! - இந்திய பெண்கள் அணி

நேபாளம் : தென் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெற்றுள்ளது.

இந்திய பெண்கள் கால்பந்து அணி
author img

By

Published : Mar 20, 2019, 8:19 PM IST

தென் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி, அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில், முதல் கோலை அடித்து இந்தியாவின் கணக்கைத் தொடங்க, தொடர்ந்து 23-வது நிமிடத்தில் இந்துமதி இரண்டாவது கோலை அடித்தார். மூன்றாவது கோலை 37-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில், இந்திய மகளிர் அணி மேலும் ஒருகோல் அடிக்க, வங்கதேச அணி கோல் அடிக்க செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால், 4-0 என்ற கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தென் ஆசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதிப் பெற்றது.

Intro:Body:

South asian foodball federation

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.