பேயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரர் ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி. இவர் இந்தாண்டு நடைபெற்ற பன்டெஸ்லீகா, சாம்பியன்ஸ் லீக் ஆகிய தொடர்களில் அதிக கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இதனால் இவர் பாலன் டி’ஓர் விருதை வெல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
இது குறித்து பேசிய லெவாண்டோவ்ஸ்கி, ‘விருது அமைப்பாளர்கள் பாலன் டி’ஓர் விருதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால், இந்தாண்டு நிச்சயம் நான் வெற்றியாளராக இருந்திருப்பேன். மேலும் சாம்பியன்ஸ் லீக் தொடரை வெல்ல வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. தற்போது அதனை நான் சாத்தியப்படுத்தியுள்ளதை எண்ணி பெருமைப்படுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
32 வயதான ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி 2019-20ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் லீக் தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்று 15 கோல்களையும், பன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் 31 போட்டிகளில் 34 கோல்களையும் அடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ பார்ட்னராக அன்அகாதமி தேர்வு!