ETV Bharat / sports

ஐஎஸ்எல்: ஒடிசாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஈஸ்ட் பெங்கால்!

author img

By

Published : Jan 3, 2021, 8:25 PM IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தியது.

SC East Bengal strike right notes to defeat Odisha FC 3-1, secure first ISL win

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் பரபரப்புடன் நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று (ஜன.03) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் கடைசி இரு இடங்களைப் பிடித்த ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா எஃப்சி அணிகள் மோதின.

இப்போட்டியின் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு, ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்திலேயே அந்தோனி கோலடித்து கோல் கணக்கை தொடக்கி வைத்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் மாகோமா கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு 88ஆவது நிமிடத்தில் பிரைட் ஏனோபகாரே கோலடித்து வெற்றியை உறுதிசெய்தார்.

தொடர்ந்து போராடிய ஒடிசா அணியால் இறுதிவரை எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை. பின்னர் ஆட்டத்தில் கிடைத்த 90+4ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டியாகோ ஆறுதலாக ஒரு கோல் அடித்தார்.

இதன் மூலம் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி, நடப்பு ஐஎஸ்எல் சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இதையும் படிங்க:ஜெமிசன் பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.