ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணி - எஃப்சி ஈஸ்ட் பெங்கால் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஈஸ்ட் பெங்கால் அணி கோலடிக்க முயற்சித்தது. அந்த அணியின் மாகோமா ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் அபார அட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணியின் அரிதானே சாந்தனா ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து, அசத்தினார். இதனால் ஹைதராபாத் அணி ஒரே நிமிடத்தில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணிக்கு ஆட்டத்தின் 68ஆவது நிமிடத்தில் நர்ஸாரி கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அதன்பின் தோல்வியைத் தவிர்க்க போராடிய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு மகோமா ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து நம்பிக்கையளித்தார்.
-
🤩 FULL-TIME in Vasco and the 3⃣ points are ours!!!
— Hyderabad FC (@HydFCOfficial) December 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Aridane's brace and Narzary's first goal in Hyderabad colours negate Maghoma's goals on either side of the break and give us our 2⃣nd win of the season.#HFCSCEB #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/ba4Di00Ko1
">🤩 FULL-TIME in Vasco and the 3⃣ points are ours!!!
— Hyderabad FC (@HydFCOfficial) December 15, 2020
Aridane's brace and Narzary's first goal in Hyderabad colours negate Maghoma's goals on either side of the break and give us our 2⃣nd win of the season.#HFCSCEB #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/ba4Di00Ko1🤩 FULL-TIME in Vasco and the 3⃣ points are ours!!!
— Hyderabad FC (@HydFCOfficial) December 15, 2020
Aridane's brace and Narzary's first goal in Hyderabad colours negate Maghoma's goals on either side of the break and give us our 2⃣nd win of the season.#HFCSCEB #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/ba4Di00Ko1
ஆனால் அதன்பின் கிடைத்த வாய்ப்புகளை ஈஸ்ட் பெங்கால் அணி நழுவவிட்டது. இதனால் ஆட்டநேர முடிவில் ஹைதராபாத் எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் எஃப்சி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் எஃப்சி அணி 9 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:’குர்பிரீத், சந்தேஷுடன் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்' - அதில் கான்