கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாகக் கருதப்படுபவர் போர்ச்சுக்கீசிய அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு சமீபத்தில் கரோனா பரிசோதனை மேற்கெள்ளப்பட்டது.
இச்சோதனையின் முடிவில் ரொனால்டோவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவ விமானம் மூலம், இத்தாலிக்கு ரோனால்டோ திரும்பியுள்ளார்.
-
.@Cristiano returns to Turin: https://t.co/LnC5E0fsMi pic.twitter.com/4eA01dmTeN
— JuventusFC (@juventusfcen) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@Cristiano returns to Turin: https://t.co/LnC5E0fsMi pic.twitter.com/4eA01dmTeN
— JuventusFC (@juventusfcen) October 14, 2020.@Cristiano returns to Turin: https://t.co/LnC5E0fsMi pic.twitter.com/4eA01dmTeN
— JuventusFC (@juventusfcen) October 14, 2020
இது குறித்து ஜுவென்டஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரொனால்டோவின் வேண்டுகோளின்படி, மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்பு மருத்துவ விமானத்தின் மூலம் அவர் இத்தாலிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரது வீட்டிலேயே ரொனால்டோ தனிமைப்படுத்தப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அனந்த்நாக் மகளிர் கிரிக்கெட் லீக்: இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து கூறிய சச்சின்...!