ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான யுஇஎஃப்ஏ (UEFA) நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஐரோப்பிய கண்டத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி குரோஷியா அணியை எதிர்த்து விளையாடியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது போர்ச்சுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை கண்டுகளித்துள்ளார்.
அப்போது அவர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியால் அமர்ந்திருந்ததைக் கண்ட பெண் பாதுகாப்பு உழியர் அவரிடம் சென்று மாஸ்க் அணியும்படி கூறியுள்ளார். இது அங்கிருந்த படப்பிடிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
-
There's no getting away from wearing a mask, even if you're Cristiano Ronaldo😷
— ESPN India (@ESPNIndia) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
(via @Esp_Interativo) pic.twitter.com/9F5REVrLoM
">There's no getting away from wearing a mask, even if you're Cristiano Ronaldo😷
— ESPN India (@ESPNIndia) September 6, 2020
(via @Esp_Interativo) pic.twitter.com/9F5REVrLoMThere's no getting away from wearing a mask, even if you're Cristiano Ronaldo😷
— ESPN India (@ESPNIndia) September 6, 2020
(via @Esp_Interativo) pic.twitter.com/9F5REVrLoM
இந்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகமே கரோனா வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு மீள்வது என சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், முன்னணி விளையாட்டு வீரர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: போட்டி அட்டவணை தயார்!