கால்பந்தில் யுவண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவிவருகிறது. இருவரும் தலா ஐந்து முறை பலான் டி ஆர் விருதை பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான பலான் டி ஆர் விருதை மெஸ்ஸி ஆறாவது முறையாக வென்று சாதனைப் படைத்தார்.
-
👏 The best player in Serie A! 🥇
— JuventusFC (@juventusfcen) December 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations, @Cristiano! 🔥 #GranGalàdelCalcio pic.twitter.com/jZhb75i3ka
">👏 The best player in Serie A! 🥇
— JuventusFC (@juventusfcen) December 2, 2019
Congratulations, @Cristiano! 🔥 #GranGalàdelCalcio pic.twitter.com/jZhb75i3ka👏 The best player in Serie A! 🥇
— JuventusFC (@juventusfcen) December 2, 2019
Congratulations, @Cristiano! 🔥 #GranGalàdelCalcio pic.twitter.com/jZhb75i3ka
இந்த நிலையில், நடப்பு ஆண்டின் சீரி ஏ கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை ரொனால்டோ பெற்றுள்ளார். 2018 ஃபிபா உலக்ககோப்பை தொடருக்குப் பிறகு இத்தாலியின் யுவண்டஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமான இவர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பதை போல, இங்கிலாந்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக இங்கிலிஷ் ப்ரீமியர் கோப்பையும், ஸ்பெயினில் ரியல் மாட்ரிட் அணிக்காக லா லிகா கோப்பையும் வென்றுத் தந்த அவர், தற்போது இத்தாலியில் யுவண்டஸ் அணிக்காக சீரி ஏ கோப்பையும் தனது முதல் சீசனிலியே பெற்றுத் தந்தார்.

யுவண்டஸ் அணிக்காக தனது முதல் சீசனில் 26 கோல்களை அடித்துள்ளார். தற்போது நடைபெற்றுவரும் 2019-20 சீசனுக்கான சீரி ஏ தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய அவர் இதுவரை ஆறு கோல்களை அடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆறாவது பலான் டி ஆர் விருது... மெஸ்ஸி மேஜிக்!