ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் நாக்அவுட் ஆட்டத்தில், யுவெண்டஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ மேட்ரிட் அணியை வீழ்த்தியது. இதில், யுவெண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அவர், அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் பயிற்சியாளரான டியாகோ சிமியோனை (Diego Simeone ) நோக்கி கொஜான்ஸ் எனப்படும் தன்முனைப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் விளைவாக, அவருக்கு சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய கால்பந்துக் குழு ரொனால்டோவிற்கு அதிகபட்ச தண்டனையாக 20 ஆயிரம் யூரோக்கள் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் பயிற்சியாளர் டியாகோ சிமியோன் இதுபோன்ற தன்முனைப்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், அவருக்கும் 20 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், யுவெண்டஸ் அணி, அஜக்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.