நடப்பு சீசனுக்கு சீரி ஏ கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் யுவென்டஸ் - வெரோனா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியது. இதையடுத்து, ஆட்டத்தின் 65ஆவது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ மிரட்டலான கோல் அடித்தார்.
இந்த சீசனில் அவர் தொடர்ந்து அடிக்கும் 10ஆவது கோல் இதுவாகும். இதன்மூலம், சீரி ஏ காலப்ந்து தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதனால், பிரான்ஸ் வீரர் டேவிட் ட்ரெஸ்குவேட் 2005இல் யுவென்டஸ் அணிக்காக தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் கோல் அடித்திருந்த சாதனையாக முறியடிக்கப்பட்டது.
-
📊 #StatOfTheGame | 10 in a row for @Cristiano ⚽️
— JuventusFC (@juventusfcen) February 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
➡️ https://t.co/Ji3r2ongOc #VeronaJuve pic.twitter.com/4OihVM03KK
">📊 #StatOfTheGame | 10 in a row for @Cristiano ⚽️
— JuventusFC (@juventusfcen) February 9, 2020
➡️ https://t.co/Ji3r2ongOc #VeronaJuve pic.twitter.com/4OihVM03KK📊 #StatOfTheGame | 10 in a row for @Cristiano ⚽️
— JuventusFC (@juventusfcen) February 9, 2020
➡️ https://t.co/Ji3r2ongOc #VeronaJuve pic.twitter.com/4OihVM03KK
ரொனால்டோ கோல் அடித்திருந்தாலும், வெரோனா அணி அப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் யுவென்டஸ் அணியை வீழ்த்தியது. வெரோனா வீரர் ஃபபியோ பொரினி 76ஆவது நிமிடத்திலும், ஜியாம்பவ்லோ பஸினி 86ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் யுவென்டஸ் அணி 54 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மறுமுனையில் வெரோனா அணி 34 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க: ரொனால்டோ உடைப்பதற்காகவே காத்திருக்கும் சாதனைகள்!