பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்துவீரரான ரொனால்டினோ, அவரது சகோதரர் ராபர்டோ ஆகியோர் போலி பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி பராகுவே நாட்டிற்குள் செல்ல முயன்றதாக, அந்நாட்டு காவல் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவரை நீதி மன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தும்படி அந்நாட்டு நீதிமன்றம் காவல் துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து இன்று நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்ட ரொனால்டினோ, போலி ஆவணங்களை பயன்படுத்தியது குறித்தான விளக்கத்தை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த பராகுவே நீதி மன்றம், ரொனால்டினோ, அவரது சகோதரர் ராபர்டோ ஆகியோரது குற்றங்கள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதுவரை அவர்களுடைய மொபைல் போன், பாஸ்போர்ட்களை கைப்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:போலி பாஸ்போட் பயன்படுத்தி சிக்கிய பிரேசில் கால்பந்து வீரர்!