ETV Bharat / sports

ஜிடேனின் மேஜிக் - 34ஆவது முறையாக பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் - பார்சிலோனா லா லீகா பட்டம்

மாட்ரிட்: வில்லாரியலுடன் நடைபெற்ற லீக் போட்டியில் 2-1 என்றக் கணக்கில் ரியல் மாட்ரிட் வெற்றிபெற்றத்தன் மூலம் லா லீகா பட்டத்தை அந்த அணி தட்டிச் சென்றது.

Real Madrid
Real Madrid
author img

By

Published : Jul 17, 2020, 6:56 PM IST

சர்வதே கால்பந்து கிளப் போட்டிகளில், ஸ்பெனில் நடைபெறும் லா லீகா முக்கியத்துவம் வாய்ந்தது. இரு முன்னணி கால்பந்து கிளப் அணிகளான ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கு இடையே ஆண்டுதோறும் லா லீகாப் பட்டத்திற்கான போட்டாப்போட்டி அனல் பறக்கும்.

இந்நிலையில் இந்தாண்டிற்கானப் பட்டத்தை ரியல் மாட்ரிட் அணி நேற்றுத் தட்டிச்சென்றது. விலாரியல் என்ற அணியுடன் நடைபெற்ற போட்டியில் நடைபெற்ற மோதலில் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணி வெற்றிபெற்றது. ஆட்டத்தின் 29, 77 ஆவது நிமிடங்களில் ரியல் மாட்ரிட் அணியைச் சேர்ந்த ஸ்ட்ரைக்கர் கரிம் பென்சிமா அடித்த கோல் மூலம் 2-0 என ரியல் மாட்ரிட் முன்னணிலை பெற்றது. 83ஆவது நிமிடத்தில் விலாரியல் அணி வீரர் இபோரா பதில் கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் முறையான தடுப்பாட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி வெற்றியைத் தக்கவைத்தது.

இந்த வெற்றியின் மூலம் 86 புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் அணி இந்தாண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்திலிருக்கும் பார்சிலோன அணி 79 புள்ளிகளுடன் உள்ளது. இரு அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அந்தப்போட்டியில் ரியல் மாட்ரிட் தோற்று பார்சிலோனா வெற்றிபெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

கடைசியாக 2016-2017ஆம் லா லீகா பட்ட வென்ற ரியல் மாட்ரிட் மூன்றாண்டு இடைவெளிக்குப்பின் தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு சீசன் தொடக்கத்தின்போது ரியல் மாட்ரிட் அணி பெரும் குழப்பத்தில் தவித்துவந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளராக ஜிடேன் மீண்டும் பொறுப்பேற்றார்.

மகிழ்ச்சிய்ல் ஜிடேனைத் தூக்கிக் கொண்டாடும் ரியல் மாட்ரிட் வீரர்கள்

அவரின் வருகைக்குப்பின் புத்துணர்வுபெற்ற ரியல் மாட்ரிட் கடந்த 10 ஆட்டங்களில் தொடர் வெற்றிபெற்று டாப் பார்மில் உள்ளது. அத்துடன், 2018,19 சாம்பியன் லா லீகாப் பட்டங்களை வென்ற பார்சிலோனா இந்தாண்டும் வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் கனவிலிருந்தது. அந்த அணியின் கனவில் மண்ணைத் தூவி ஜிடேனின் மேஜிக்கால் பட்டம் வென்றது ரியல் மாட்ரிட்.

இதையும் படிங்க: பாதுகாப்பை மீறி வீட்டுக்குச் சென்ற ஆர்ச்சரை ஓரங்கட்டிய இங்கிலாந்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.