ETV Bharat / sports

தொடர்ந்து இரண்டு பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்காத செர்ஜியோ ராமோஸ் - பெனால்டி வாய்ப்பை மிஸ் செய்த ராமோஸ்

யுஈஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரில் ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிராக கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்பிலும் கோல் அடிக்காமல் செர்ஜியோ ராமோஸ் தவறவிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ramos-causes-missed-spot-kick-drama-on-record-setting-night

author img

By

Published : Nov 15, 2020, 8:17 PM IST

யுஈஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் லீக் ஏ குரூப் 4 பிரிவில் ஸ்பெய்ன் - ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் ஸ்விட்சர்லாந்து அணியின் ரெமோ முதல் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதையடுத்து ஸ்பெய்ன் அணியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ ராமோஸிற்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த வாய்ப்புகள் இரண்டையும் தவறவிட, 89ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் ஜெரார்ட் மொரெனோ கோல் அடித்து சமன் செய்தார். இறுதியாக இரு அணிகளும் 1-1 என்ற கோல்கள் அடித்ததால், ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்தப் போட்டியில் செர்ஜியோ ராமோஸ் பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்காமல் தவறவிட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடைசியாக கிடைத்த 25 பெனால்டி வாய்ப்புகளிலும் செர்ஜியோ கோல் அடித்துள்ளார்.

இது குறித்து ஸ்பெய்ன் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் கூறுகையில், ''25 முறை தொடர்ந்து ராமோஸ் பென்லாடி வாய்ப்புகளில் கோல் அடித்துள்ளார். ஒருவேளை இன்றே மூன்றாவதாக பெனால்டி வாய்ப்பு கிடைத்திருந்தால், நிச்சயம் அதையும் அவர் தான் ஏற்றிருந்து கோல் அடித்திருப்பார்'' என்றார்.

இதையும் படிங்க: 6 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் வீழ்ந்த போர்ச்சுகல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.