ஆசிய கால்பந்து சம்மேளனம் சார்பாக கிளப் அணிக்களுக்கான ஏஎஃப்சி கோப்பை கால்பந்து தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. குரூப் சுற்றுப் போட்டிகளாக நடத்தப்பட்டு வரும், இந்தத் தொடரின் நேற்றையப் போட்டியில் பிஎஸ்எம் அணியை எதிர்த்து கயா எஃப்.சி அணி ஆடியது.
இந்தத் தொடரில் பிஎஸ்எம் அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் மூன்றாம் இடத்திலும், கயா அணி ஆடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி அந்நாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் போடும் முனைப்பில் ஆடியதால், போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பலனாக ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் பிஎஸ்எம் அணியின் ஒசாஸ் கோல் அடித்து அசத்தினார். அதையடுத்து இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இதையடுத்து தொடர்ந்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் கயா எஃப்.சி அணியின் எரிக், அணியின் முதல் கோலை அடித்து சமன் செய்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற நிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல்கள் எதுவும் போடாததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
இதையும் படிங்க: எல் கிளாசிகோ: 6 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் பார்சிலோனாவை வென்ற ரியல் மாட்ரிட்!