இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.26) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்செனல் அணி, லெய்செய்டர் சிட்டி அணியை எதிர்த்து விளையாடிது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோலடிக்க முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அண்யும் கோலேத்துமின்றி சமநிலையுடன் இருந்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட லெய்செஸ்டர் சிட்டி அணியின் ஜாமி வார்டி ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார். பின்னர் இறுதி வரை போராடிய அர்சனல் அணியால் எதிரணியின் டிஃபென்ஸை கடந்து கோலடிக்க இயலவில்லை.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் லெய்செஸ்டர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்சனல் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க:ஏடிபி தொடர்: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்வெரவ்!