ETV Bharat / sports

பிரீமியர் லீக் தொடரில் ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி! - தமிழ் விளையாட்டு செய்திகள்

கரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் ஜூன் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

Premier League allows five substitutes for the rest of 2019-20 season

author img

By

Published : Jun 5, 2020, 4:32 AM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர். இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வந்த 2019-20ஆம் ஆண்டிற்கான இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரும் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அங்கு வைரஸின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் பார்வையாளர்களின்றி விளையாட்டு போட்டிக்களை நடத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் பிரீமியர் லீக் தொடரை பார்வையாளர்களின்றி ஜூன் 17ஆம் தேதி முதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போது ஐந்து மாற்று வீரர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பிரீமியர் லீக் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரீமியர் லீக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அறிவுரைப்படி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகள் ஐந்து மாற்று விரர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இதேபோல் வெளியிலிருக்கும் வீரர்களின் எண்ணிக்கையையும் ஏழிலிருந்து ஒன்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.