பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் போக்பா. நடுகள கால்பந்து வீரரான இவர், தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக, குரோஷியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதில், போக்பா ஒரு கோல் அடித்திருந்தார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் பள்ளி படிப்புக்கு பணம் செலுத்த முடியாமல் வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவும் விதமாக, உலகக் கோப்பையில் அவர் அணிந்திருந்த காலணிகள் ஏலத்தில் விடப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ. 23 லட்சத்தி 41 ஆயிரத்துக்கு இந்த காலணி விலை (30,000 யூரோக்கள்) போனது.