1982ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி சாம்பியன் ஆனது. இத்தொடரின் லீக் போட்டிகளில் தடுமாறிய இத்தாலி அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்று சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் பவுலோ ரோஸி. இத்தொடரில் ஆறு கோல்களை அடித்து, 'கோல்டன் பூட்' விருதையும் பெற்றார்.
அதிலும் இத்தொடரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் பிரேசில் அணிக்கு எதிராக ரோஸி அடித்த ஹாட்ரிக் கோல்கள்‘ கால்பந்து ரசிகர்களை பிரமிக்க வைத்ததிருந்தது. அரையிறுதியில் போலந்து அணிக்கு எதிராக இரண்டு கோல்களையும் ரோஸி அடித்தார். இறுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு எதிராக 1 கோலையும் ரோஸி அடித்து இத்தாலி சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் வழிவகுத்தார். மேலும் அதே ஆண்டு கால்பந்தில் சிறந்து விளங்கியதற்கான 'பாலன் டி ஓர்' விருதையும் கைப்பற்றி அசத்தினார்.
புகழ் பெற்ற யுவென்டஸ் மற்றும் ஏ.சி. மிலன் அணிகளுக்காகவும் விளையாடியுள்ள ரோஸி 1987ஆம் ஆண்டு கால்பந்திலிருந்து ஓய்வு பெற்றார். மேலும் இத்தாலி அணிக்காக 48 சர்வதேச போட்டிகளில் விளையாடிவுள்ள ரோஸி, 20 கோல்களையும் அடித்துள்ளார். தனது ஓய்வுக்கு பின்னர் ரோஸி விளையாட்டு தொலைக்காட்சியின் வர்ணனையாளராகவும் பணிபுரிந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பவுலோ ரோஸி(64), இன்று உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இத்தகவலை அவரது மனைவி ஃபெடெரிக்கா கப்பெலெட்டி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
-
A true Azzurri hero has left us. Ciao Pablito, and thank you for everything 💙 pic.twitter.com/CyaNayTHml
— Italy ⭐️⭐️⭐️⭐️ (@azzurri) December 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A true Azzurri hero has left us. Ciao Pablito, and thank you for everything 💙 pic.twitter.com/CyaNayTHml
— Italy ⭐️⭐️⭐️⭐️ (@azzurri) December 10, 2020A true Azzurri hero has left us. Ciao Pablito, and thank you for everything 💙 pic.twitter.com/CyaNayTHml
— Italy ⭐️⭐️⭐️⭐️ (@azzurri) December 10, 2020
கடந்த மாதம் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நீங்குவதற்குள், தற்போது இத்தாலியின் கால்பந்து ஜாம்பவான் பவுலோ ரோஸி உடல் நலக்குறைவால் மரணமடைந்த செய்தி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல் தொடர்: சென்னையை வீழ்த்திய மும்பை!