ETV Bharat / sports

#SAFFU15WomensChampionship: இறுதிச்சுற்றில் ஸ்டைலாக நுழைந்த இந்தியா! - தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 2019

மகளிருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி பூடானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

SAFF U15
author img

By

Published : Oct 12, 2019, 12:49 PM IST

தெற்காசிய கால்பந்து சம்மேளனம் சார்பில், 2019ஆம் ஆண்டுக்கான மகளிர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் பூடானில் நடைபெற்றுவருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், வங்கதேசம், பூடான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் நேபாளத்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் இந்திய அணி, பூடானுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எட்டாவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பிரியங்கா சுஜேஷ் கோல் அடிக்க, அதற்கு அடுத்த நிமிடத்திலேயே பூடான் வீராங்கனை சங்கே வாங்க்மோ கோல் அடித்தார்.

SAFF U15
கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்

இதனால், முதல் பத்து நிமிடத்திற்குள்ளே இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டத்தில் அனல் பறக்கம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி சீரான இடைவெளியில் கோல்களை அடித்து பூடான் வீராங்கனைகளை அப்செட் செய்தனர்.

முதல் பாதி முடிவில் இந்திய அணி ஐந்து கோல்களை அடித்திருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இந்திய அணி ஐந்து கோல் அடிக்க இறுதியில், 10-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஆறு புள்ளிகளுடன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

SAFF U15
பூடானை பந்தாடிய இந்திய அணி

இந்திய அணி சார்பில் சாய் ஷாங்கே ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவரைத் தவிர கிரண், லின்டா கோம் செர்டா, சுமதி குமாரி ஆகியோர் தலா இரண்டு கோல்களை அடித்தனர். இதைத் தொடர்ந்து, நாளை நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.