ஐஎஸ்எல் தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்த்து ஜாம்ஷெத்பூர் எஃப்.சி. அணி ஆடியது. இந்த ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணியின் ஃபெடரிகோ முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பானது. இதையடுத்து முதல் பாதி ஆட்ட நேரம் முடிவடைந்தபோது, கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஜாம்ஷெத்பூர் அணியின் டேவிட் கிராண்ட் கோல் அடித்து 1-1 என சமநிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்று கணக்கில் முடிவுக்கு வந்தது.
பின்னர், நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் போடும் முனைப்பில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பலனாக ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரதீம் இரண்டாவது கோல் அடித்தார். அதனைத்தொடர்ந்து ஜாம்ஷெத்பூர் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீணடித்தது.
-
Last 5⃣ meetings between @NEUtdFC and @JamshedpurFC - 5⃣ goals!
— Indian Super League (@IndSuperLeague) February 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tonight's #NEUJFC - 6⃣ goals 🤯
Check them all out here 👇#HeroISL #LetsFootball pic.twitter.com/V7JE67tMk2
">Last 5⃣ meetings between @NEUtdFC and @JamshedpurFC - 5⃣ goals!
— Indian Super League (@IndSuperLeague) February 10, 2020
Tonight's #NEUJFC - 6⃣ goals 🤯
Check them all out here 👇#HeroISL #LetsFootball pic.twitter.com/V7JE67tMk2Last 5⃣ meetings between @NEUtdFC and @JamshedpurFC - 5⃣ goals!
— Indian Super League (@IndSuperLeague) February 10, 2020
Tonight's #NEUJFC - 6⃣ goals 🤯
Check them all out here 👇#HeroISL #LetsFootball pic.twitter.com/V7JE67tMk2
தொடர்ந்து 82ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெத்பூர் அணியின் அகோஸ்டா கோல் அடித்து 2-2 என சமன் செய்ய, தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜாம்ஷெத்பூர் அணியின் மெமோ 85ஆவது நிமிடத்தில் கோல் அடித்ததால், அந்த அணி 3-2 என முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி முடிவடைவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்த நிலையில் ஜாம்ஷெத்பூர் அணி கோல் அடித்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதற்கு 88ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் மார்டின் கோல் அடிக்க ஆட்டம் 3-3 டிராவானது. பின்னர் கூடுதலாக ஆறு நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் கோல்கள் எதுவும் கிடைக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.
இதையும் படிங்க: கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி தொடர்: 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்ற இந்தியன் ஆர்மி!