ETV Bharat / sports

கோவிட்-19 நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுத்த நெய்மர்!

author img

By

Published : Apr 4, 2020, 6:00 PM IST

ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மர் கோவிட்-19 வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், 10 லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளார்.

Neymar  COVID-19  கோவிட்19 நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுத்த நெய்மர்  நெய்மர் நிதியுதவி  கோவிட்19 வைரஸ் தாக்குதல்  Neymar donates $1 million

பிரேசில் நாட்டைச் சேர்ந்தப் பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மர், கரோனா (கோவிட்19) வைரஸ் நிவாரண நிதியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளார். இந்த நிதியுதவி ஐநா குழந்தைகள் நல நிதி மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவரின் அறக்கட்டளைக்கும் செல்கிறது.

ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிகமாக கோவிட்-19 பாதிக்கப்படாத நாடாக பிரேசில் உள்ளது. இந்நாட்டில் பத்து ஆயிரம் பேர் கோவிட்-19 வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். உயிரிழப்பு 359 ஆக உள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கோவிட்-19 வைரஸூக்கு அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கோவிட்19 நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுத்த நெய்மர்

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களில் ஒருவராக 28 வயதான நெய்மர் விளங்குகிறார். பாரிஸ் செயிண்ட் - ஜெர்மெய்ன் கிளப்பில் இவருடைய வருமானம் மாதத்துக்கு, ரூ. 24.45 கோடி ($3.2 மில்லியன்) ஆகும்.

பிரேசிலில் கடுமையான பூட்டுதல் (லாக் டவுன்), ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், விளையாட்டு வீரர்கள் அதிகளவு நிதி அளித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.