கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவது பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் உள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.
அந்த வரிசையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியருக்கும் இம்மாதம் 2ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இத்கவலை அவர் விளையாடி வந்த பி.எஸ்.ஜி., கால்பந்து கிளப் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நெய்மர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தர்.
இந்நிலையில், நெய்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார். ”நான் கரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என அவர் பதிவிட்டுள்ளார்.
-
Voltei aos treinos, super feliz ... O PAI TA ON 🤪 #CORONAOUT
— Neymar Jr (@neymarjr) September 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Voltei aos treinos, super feliz ... O PAI TA ON 🤪 #CORONAOUT
— Neymar Jr (@neymarjr) September 11, 2020Voltei aos treinos, super feliz ... O PAI TA ON 🤪 #CORONAOUT
— Neymar Jr (@neymarjr) September 11, 2020
அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மற்ற பி.எஸ்.ஜி., அணி வீரர்கள் ஏஞ்சல் டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோரும் தொற்றிலிருந்து குணமடைந்து பயிற்சிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் மோர்கன், கம்மின்ஸ் - உறுதி செய்த கேகேஆர்!