ETV Bharat / sports

ஐஎஸ்எல் தொடர்: சென்னையை வீழ்த்திய மும்பை! - மும்பை சிட்டி எப்.சி. அணி

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 22ஆவது லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்.சி.யை மும்பை சிட்டி எஃப்.சி. அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் மும்பை முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஐஎஸ்எல் தொடர்: சென்னையை வீழ்த்திய மும்பை!

author img

By

Published : Dec 10, 2020, 6:15 AM IST

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியின் 7ஆவது சீசன் கோவாவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று இரவு நடந்த 22ஆவது லீக் போட்டியில், பலம்வாய்ந்த மும்பை சிட்டி எஃப்.சி. அணியும், சென்னையின் எஃப்.சி. அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்.சி.யை மும்பை சிட்டி எஃப்.சி. அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.

கடந்த மூன்று போட்டிகளில் ஒரு கோல்கூட விட்டுக் கொடுக்காத மும்பை சிட்டி அணிக்கு எதிராக சென்னை அணியின் ஜாகுப் சில்வெஸ்டர் 40ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மும்பை அணி தரப்பில் ஹெர்னன் சந்தனா 45ஆவது நிமிடத்திலும், ஆடம் லி போன்ட்ரே 75ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, நான்கு வெற்றிகளைப் பதிவுசெய்து, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முந்தைய போட்டியில் தோல்வி அடைந்த சென்னை அணி, வெற்றிப் பாதைக்குத் திரும்பி ரசிகர்களை மகிழ்விக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் போராடித் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: ஐசிசி டி20 தரவரிசை: டாப் 3-யில் இடம்பிடித்த ராகுல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.