ETV Bharat / sports

கால்பந்து: மெஸ்ஸியின் ஆட்டத்தில் வீழ்ந்த லிவர்பூல்! - லிவர்பூல்

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது.

கால்பந்து: மெஸ்ஸியின் ஆட்டத்தில் வீழ்ந்த லிவர்பூல்!
author img

By

Published : May 2, 2019, 10:34 PM IST

ஐரோப்பா சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பார்சிலோனா (ஸ்பெயின்) - லிவர்பூல் (இங்கிலாந்து) கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான முதல் கட்ட அரையிறுதிப் போட்டி பார்சிலோனாவின் கேம்ப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

ஐரோப்பாவின் பலம் வாய்ந்த இரு அணிகளும் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேருக்கு நேர் மோதிக்கண்டனர். இதனால், இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் தொடக்த்தில் சிறப்பாக செயல்பட்ட பார்சிலோனா அணியின் ஸ்ட்ரைக்கர் சுவாரஸ் 26ஆவது நிமிடத்தில் அணிக்கு முதல் கோல் அடித்தார். பின்னர், இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி 75ஆவது நிமிடத்தில் எளிதாக ஒரு கோல் அடிக்க, 82ஆவது நிமிடத்தில் மீண்டும் ஃப்ரீ கிக் முறையில் சிறப்பான கோல் அடித்தார். இதன் மூலம், பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக மெஸ்ஸி 600 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Messi
மெஸ்ஸியின் 600ஆவது கோல்

இதனிடையே, லிவர்பூல் அணிக்கு கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர். இறுதியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட அரையிறுதிப் போட்டி மே 8ஆம் தேதி ஹன்ஃபீல்டு (Anfield) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.