ETV Bharat / sports

மேட்ச் ஃபிக்ஸிங் கருத்து மெஸ்ஸிக்கு அபராதம் - பிரேசில்

கோபா அமெரிக்கா தொடர் குறித்து தரக் குறைவான கருத்துகளை பேசியதற்காக அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு 1500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸிக்கு அபராதம்
author img

By

Published : Jul 24, 2019, 5:25 PM IST

கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக வலம் வருபவர், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி. இவர், அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் குறித்து தரவக்குறைவான கருத்துக்களை வெளியிட்டார்.

பிரேசில் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தியது.

Messi
சிலி வீரர்களுடன் மோதிய போது

இந்தப் போட்டியின் போது, சிலி அணி வீரருடன் மோதியதற்காக மெஸ்ஸிக்கு நடுவர் ரெட் கார்ட் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மெஸ்ஸி, கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை பிரேசில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இந்தத் தொடர் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இத்தகைய ஊழல் நிலவிய இந்தத் தொடரில் நான் ஒருபோதும் பங்கேற்க மாட்டேன் என விமர்சனம் செய்தார். மேலும், மூன்றாவது இடத்துக்கான பதக்கத்தையும் அவர் பெறவில்லை.

இதைத்தொடர்ந்து, மெஸ்ஸியின் இந்த கருத்துக்கு பிரேசில் வீரர்கள் சரமாரியாக கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, மெஸ்ஸியின் இந்த கருத்துக்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சர்வதேச போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், கோபா அமெரிக்கா தொடர் கூட்டமைப்பு அவருக்கு 1500 அமெரிக்க டாலரை அபராதமாக விதித்துள்ளது. மேலும், அவர் சிலி போட்டி எதிராக ரெட் வாங்கியதால் ஒரு போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2022 ஃபிபா உலகக்கோப்பைக்கான அர்ஜென்டினா அணியின் முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். 2019ஆம் ஆண்டுக்கான கோப்பா அமெரிக்கா தொடரை பிரேசில் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Messi 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.