லா லிகா தொடரின் டிபெண்டிங் சாம்பியன் அணியான பார்சிலோனா அணியை எதிர்த்து கிரனடா அணி விளையாடியது. இந்தப் போட்டிக்கு முன்னதாக பார்சிலோனா அணியின் புதிய பயிற்சியாளராக குயிக் செட்டியன் நியமிக்கப்பட்டதால், புதிய பயிற்சியாளருக்கு முதல் போட்டி எவ்வாறு அமையும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே பார்சிலோனா அணியின் கைகள் ஓங்கியே இருந்தது. அதிகபடியான பாஸ்கள் செய்த பார்சிலோனா அணி, கிரனடா அணியினரின் தடுப்பாட்டத்தை மட்டும் கடந்து கோல்கள் போட முடியவில்லை. கிரனடா அணியால் பார்சிலோனா அணியின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால், கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமலே இருந்தது. இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்காத நிலையில், முதல் பாதி முடிவுக்கு வந்தது.
-
#messi my goat pic.twitter.com/CjohHmGBu1
— ً (@Callxm) January 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#messi my goat pic.twitter.com/CjohHmGBu1
— ً (@Callxm) January 19, 2020#messi my goat pic.twitter.com/CjohHmGBu1
— ً (@Callxm) January 19, 2020
இதையடுத்து நடந்த இரண்டாம் பாதியில் பார்சிலோனா அணியின் ஆட்டம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. இதன் பலனாக அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி, ஆட்டத்தின் 76ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடாததால், பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: பார்சிலோனா பயிற்சியாளர் அதிரடி நீக்கம்