ETV Bharat / sports

மாரடோனா உடற்கூறாய்வு முடிவு வெளியீடு: முடிவுக்கு வரும் சந்தேகம் - மரடோனா

மாரடோனா சிறுநீரகங்கள், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக சான் ஐசிட்ரோ அரசு தரப்பு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனா
‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனா
author img

By

Published : Dec 24, 2020, 2:36 PM IST

புவெனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா இறப்பதற்கு முந்தைய நாட்களில் எந்தவித போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்று வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்த மாரடோனா, மூளையில் ரத்தம் உறைவதை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

மாரடோனாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்!

இந்த சிகிச்சை மேற்கொண்ட அடுத்த ஒரு மாதத்திற்குள் அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா கடந்த நவம்பர் 25 ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டு தனது 60-தாவது வயதில் உயிரிழந்தார்.

மாரடோனா சிறுநீரகங்கள், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சான் ஐசிட்ரோ சேர்ந்த அரசு தரப்பு வழக்கறிஞரால் வெளியிடப்பட்டுள்ள உடற்கூறாய்வின் முடிவுகள் தெரிவித்தன.

இதையடுத்து மாரடோனாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் தரப்பில் அலட்சியம் இருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கால்பந்து வீரர்களுடன் விளையாடி மகிழ்ந்த மாரடோனா

ஆரம்பகட்ட உடற்கூறாய்வில் மாரடோனாவின் "கடுமையான நுரையீரல் வீக்கம், இரண்டாம் நிலை முதல் நீடித்த கார்டியோமயோபதியுடன் நாள்பட்ட இதய செயலிழப்பை அதிகரித்தது" என்று கண்டறிந்தார். அவர் போதை பழக்கத்திலிருந்து வெளிவர போராடிகொண்டு இருந்ததாக கூறப்பட்டது.

விசாரணையின் ஒரு பகுதியாக மாரடோனா இறந்த சில நாட்களில் லூக் மற்றும் மனநல மருத்துவர் அகஸ்டினா கோசச்சோவ் ஆகிய இருவருடனும் காவல்துறையிர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனா இறப்பதற்கு முந்தைய நாட்களில் எந்தவித போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்று வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனாவின் வாழ்க்கைப் பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.