கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விளையாட்டு வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமாக முன்வந்து சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும், நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகின்றனர்.
அந்த வகையில் பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் ஃபெர்னாண்டினோ, பிரபல விளையாட்டு இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இதுநாள் வரை அவருக்கு சவாலாக இருந்த எதிரணி வீரர்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அதில், தடுப்பாட்ட வீரராக இதுநாள் வரை தான் எதிர்கொண்ட மிகவும் சவாலான எதிரணி ஸ்டிரைக்கர்கள் என்றால் அது லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் தான். அவர்கள் இந்த விளையாட்டின் மிகச்சிறந்த வீரர்கள் மட்டுமின்றி, தடுப்பாட்டக்காரர்களுக்கு மிகவும் சிக்கலை உருவாக்குபவர்கள்.
மேலும், தனக்கு மிகவும் நெருக்கடியை கொடுத்த வீரர் டியாகோ கோஸ்டா. அவர் தற்போது செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். அவர் மிகவும் சிறந்த கால்பந்து வீரர். அவரைத் தான் நிச்சயம் மீண்டும் எதிர்கொள்வேன் என்றார்.
இதையும் படிங்க:தோனி போன்ற ஒருவருக்கு பந்துவீச கற்றுக்கொள்ளுங்கள் - கோரி ஆண்டர்சன்!