இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று (ஜன. 22) நடைபெற்ற லீக் போட்டியில் லிவர்பூல் அணி - பர்ன்லி எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோலடிக்கும் முயற்சிகளை தடுத்தனர். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது. பின்னர் ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் பர்ன்லி எஃப்சி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாகப் பயன்படுத்திய அஷ்லே பார்ன்ஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பர்ன்லி எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: பாரா கிளைடிங், ஸ்கை டைவிங்கில் அசத்தும் வீரர்கள்!