ETV Bharat / sports

#UEFASUPERCUP: பெனால்டியில் அசத்திய கோல்கீப்பர்... லிவர்பூல் சாம்பியன்! - UEFA SUPER CUP

ஐரோப்பா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் லிவர்பூல் அணி பெனால்டி முறையில் செல்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

Liverpool
author img

By

Published : Aug 15, 2019, 11:22 PM IST

ஐரோப்பா சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நேற்று இஸ்டான்புல் நகரில் நடைபெற்றது. இதில், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் வென்ற லிவர்பூல் அணி, ஐரோப்பா யுரோ கோப்பை வென்ற செல்சி அணியை எதிர்கொண்டது. இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் செல்சி அணியின் ஸ்ட்ரைக்கர் ஆலிவர் ஜிரோட் கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

Liverpool
ஆட்டத்தின் முதல் கோல் அடித்த செல்சி வீரர் ஆலிவர் ஜிரோட்

பின்னர், இரண்டாவது பாதி தொடங்கியவுடன், லிவர்பூல் அணி அட்டாக்கிங் முறையில் ஈடுபட்டதால், 48ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் சடியோ மானே கோல் அடித்தார். பின்னர், மீண்டும் அவர் ஆட்டத்தின் 95ஆவது நிமிடத்தில் மிரட்டலான கோல் அடிக்க, லிவர்பூல் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், செல்சி அணிக்கு 100ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டது. இதை அந்த அணியின் வீரர் ஜார்ஜின்ஹோ கோலாக மாற்ற ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

UEFA SUPERCUP
லிவர்பூல் அணிக்கு கோல் அடித்த சாடியோ மானே

பின்னர், இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க தவறியதால் ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக பெனால்டி நடைபெற்றது. இதில், இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த நான்கு வாய்ப்புகளை கோலாக மாற்றியதால், 4-4 என்ற கணக்கில் போட்டி ரசிகர்களை நுனி சீட்டில் உட்கார வைத்தது.

Liverpool
பெனால்டி ஷாட்டை தடுத்தி நிருத்திய லிவர்பூல் கோல்கீப்பர்

பின்னர், லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலாஹ் கடைசி வாய்ப்பை கோலாக மாற்றினார். அதேசமயம், செல்சி வீரர் டாமி ஆஃப்ரஹம் அடித்த ஷாட்டை லிவர்பூல் அணியின் கோல்கீப்பர் ஆட்ரியான் தடுத்ததால், லிவர்பூல் அணி 5-4 என்று பெனால்டி முறையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், லிவர்பூல் அணி நான்காவது முறை ஐரோப்பா சூப்பர்கோப்பையை வென்று அசத்தியது.

Intro:Body:

SuperCup : Chelsea vs Liverpool

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.