முன்னாள் இங்கிலாந்து அணியின் கால்பந்து வீரரான ரியோ ஃபெர்டினண்ட், #AskRio என்ற ஹேஸ்டாக் மூலம் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், தற்போது உள்ள லிவர்பூல் அணியுடன் 2008ஆம் ஆண்டு யுனைடெட் லீக் சாம்பியன் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை ஒப்பிடுவீர்களா? எனக் கேள்வி கேட்டார்.
அதற்கு ஃபெர்டினண்ட், லிவர்பூல் அணி தொடர்ந்து அடுத்தடுத்து கோப்பைகளைக் கைப்பற்ற வேண்டும். நிச்சயம் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் லிவர்பூல் அணி மாபெரும் அணியாகும் பாதையில் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது என்றார்.
-
Need to win back to back league titles before being compared but there’s no denying they’re on route to being great team! #Simples #AskRio https://t.co/J5isBFPytb
— Rio Ferdinand (@rioferdy5) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Need to win back to back league titles before being compared but there’s no denying they’re on route to being great team! #Simples #AskRio https://t.co/J5isBFPytb
— Rio Ferdinand (@rioferdy5) January 3, 2020Need to win back to back league titles before being compared but there’s no denying they’re on route to being great team! #Simples #AskRio https://t.co/J5isBFPytb
— Rio Ferdinand (@rioferdy5) January 3, 2020
இதனிடையே வியாழக்கிழமை, ஷெஃபீல்டு யுனைடெட் அணியை 0-2 என லிவர்பூல் அணி வீழ்த்தியது. இதுவரை பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 20 போட்டிகளில் விளையாடி 58 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வு குறித்த மனம் திறந்த இந்திய கால்பந்து கேப்டன் சுனில்!