ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு, யூனியன் ஆஃப் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களினால் ஒவ்வொரு வருடமும் சிறந்த பொசிஷ்னலுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2018-19 வருடத்தின் விருதுகளுக்கான பரிந்துரைகளில் மூன்று பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் லிவர்பூல் அணியிலிருந்து அலிசன் பெக்கர், ட்ரெண்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட், ஜோர்டான் ஹென்டர்சன், விர்ஜில் வான் டிஜ்க் மற்றும் சாடியோ மானே ஆகியோர் வெவ்வேறு விருது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஜுவென்டஸி அணியின் ஸ்ட்ரைக்கர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், பார்சிலோனா அணியின், லியோனல் மெஸ்ஸி ஆகியோர் ஃபர்வர்ட் விருதுகளுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொசிஷ்னல் விருதுகளுக்கு பரிந்துரைக்கபட்டவர்கள்:
கோல் கீப்பர்கள்: ஆலிசன் பெக்கர்(லிவர்பூல்), ஹியூகோ லோரிஸ் (டோட்டன்ஹாம்), மார்க்-ஆண்ட்ரே டெர் ஸ்டீகன் (பார்சிலோனா) ஆகியோர் பரிந்துரைக்கபட்டுள்ளனர்.
டிஃபெண்டர்ஸ்: ட்ரெண்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட் (லிவர்பூல்), மாத்திஜ்ஸ் டி லிக்ட் (அஜாக்ஸ், இப்போது ஜுவென்டஸ்), விர்ஜில் வான் டிஜ்க் (லிவர்பூல்) ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மிட் பீல்டர்ஸ் விருதுகளுக்காக, ஃபிரெங்கி டி ஜாங் (அஜாக்ஸ், இப்போது பார்சிலோனா), கிறிஸ்டியன் எரிக்சன் (டோட்டன்ஹாம்), ஜோர்டான் ஹென்டர்சன் (லிவர்பூல்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
ஃபார்வேர்ட் விருதுகளுக்காக, சாடியோ மானே (லிவர்பூல்), லியோனல் மெஸ்ஸி (பார்சிலோனா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (ஜுவென்டஸ்) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
பொசிஷ்னல் விருதுகளுக்கான வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மொனாக்கோவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் குழு போட்டிகளின் போது அறிவிக்கப்படுவார்கள்.