ETV Bharat / sports

இபிஎல்: டிராவில் முடிந்த லிவர்பூல் - வெஸ்ட் போர்ம் ஆட்டம்! - வெஸ்ட் போர்ம்

இபிஎல் கால்பந்து தொடரில் லிவர்பூர் - வெஸ்ட் போர்ம் அணிகளுக்கு இடையே இன்று (டிசம்பர் 28) நடைபெற்ற லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

Liverpool 1-1 West Brom: Semi Ajayi heads late equaliser to cancel out Sadio Mane strike

author img

By

Published : Dec 28, 2020, 10:04 AM IST

நடப்பு சீசனுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லிவர்பூல் அணி, வெஸ்ட் போர்ம் அணியை எதிர்கொண்டது.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் 12ஆவது நிமிடத்திலேயே லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் அன்வர் சாடியோ மனே கோலடித்து அசத்தினார்.

முதல் பாதி ஆட்டத்தில் கோலடிக்க முயற்சித்த வெஸ்ட் போர்ம் அணியின் அனைத்து முயற்சிகளையும் லிவர்பூல் அணி தகர்த்தது. இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வெஸ்ட் போர்ம் அணிக்கு ஆட்டத்தின் 82ஆவது நிடத்தில் செமி அஜய் கோலடித்து, அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.

இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இதன்மூலம் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இபிஎல் புள்ளிப்பட்டியலில் லிவர்பூல் அணி 32 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், வெஸ்ட் போர்ம் அணி 8 புள்ளிகளுடன் 19ஆவது இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க:ஐசிசி கனவு டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.