இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 7ஆவது சீசன் பிளே ஆஃப் சுற்றை நெருங்கிவிட்டது. நேற்று (பிப்.12) நடைபெற்ற லீக் போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணி - எஸ்.சி.ஈஸ்ட் பெங்கால் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், கோல் ஏதுமின்றி ஆட்டம் சமநிலையில் இருந்தது.
-
FULL-TIME in Vasco! Late goal from Aridane Santana cancels out Bright Enobakhare's opener to win us a crucial point! #SCEBHFC #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/Bs3IgFcqhW
— Hyderabad FC (@HydFCOfficial) February 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FULL-TIME in Vasco! Late goal from Aridane Santana cancels out Bright Enobakhare's opener to win us a crucial point! #SCEBHFC #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/Bs3IgFcqhW
— Hyderabad FC (@HydFCOfficial) February 12, 2021FULL-TIME in Vasco! Late goal from Aridane Santana cancels out Bright Enobakhare's opener to win us a crucial point! #SCEBHFC #LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/Bs3IgFcqhW
— Hyderabad FC (@HydFCOfficial) February 12, 2021
அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதியில் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈஸ்ட் பெங்கால் அணி 59ஆவது நிமிடத்தில் பிரைட் ஏனோபகாரே கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
பின்னர் தோல்வியைத் தவிர்க்க போராடிய ஹைதராபாத் அணி ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+4ஆவது நிமிடத்தில் கோலடித்து தோல்வியைத் தவிர்த்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தேர்வில் முதற்கட்டமாக 65 வீரர்கள் தேர்வு!