ETV Bharat / sports

எல் கிளாசிகோ: 6 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் பார்சிலோனாவை வென்ற ரியல் மாட்ரிட்!

author img

By

Published : Mar 2, 2020, 4:08 PM IST

மாட்ரிட்டில் நடைபெற்ற லா லிகா கால்பந்து தொடரின் எல் கிளாசிகோ போட்டியில் ரியல் மாட்ரிட் அணி, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் பார்சிலோனாவை வீழ்த்தியுள்ளது.

La Liga: Real Madrid outplay Barcelona to go top of standings

எல் கிளாசிகோவில் ரொனால்டோ, ரோஹித் சர்மா:

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் லா லிகா கால்பந்து தொடரில் நேற்று சன்டிகோ பெர்னாபுவில் (மாட்ரிட்) நடைபெற்ற எல் கிளாசிகோ போட்டியில் பரம எதிரிகளான நடப்பு சாம்பியன் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. கிரிக்கெட்டில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் எந்த அளவிற்கு மிகப் பெரிய தொடரோ அதுபோலதான் கால்பந்துக்கு இந்த எல் கிளோசிகோ போட்டி.

EL CLassico
எல் கிளாசிகோ

புகழ்பெற்ற இரு அணிகள் விளையாடும் இந்தப் போட்டியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், வல்லுநர்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ரியல் மாட்ரிட்டில் ஒன்பது சீசன்கள் விளையாடிவிட்டு, தற்போது யுவென்டஸ் அணியில் விளையாடிவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போட்டியைக் காண நேரில் வந்திருந்தார். அதேபோல், இந்திய கிரிக்கெட் வீரரும், லா லிகா இந்தியாவின் தூதருமான ரோஹித் சர்மா இப்போட்டியைக் காண நேரில் சென்றார்.

Ronaldo
ரொனால்டோ

பொதுவாக, எல் கிளாசிகோ போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கும். ஆனால், இம்முறை அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்ததற்கு முக்கிய காரணமே நடப்பு லா லிகா தொடரின் புள்ளிப் பட்டியல்தான். இதில், பார்சிலோனா அணி, ரியல் மாட்ரிட்டைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்று முதலிடத்தில் இருந்தது. இதனால், இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலின் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால், இப்போட்டி இரு அணிகளுக்கும் தனிப்பட்ட ரைவல்ரிகளை விட மிக முக்கியமான போட்டியாக பார்க்க்கப்பட்டது.

முதல் பாதி- பார்சிலோனா அதிரடி:

இதைத்தொடர்ந்து, முதல் பாதியில் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் பார்சிலோனா அணி, ரியல் மாட்ரிட்டை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக, பார்சிலோனா அணிக்கு முதல் பாதியில் கோல் அடிக்க மட்டும் மூன்று வாய்ப்புகள் கிடைத்தன. 13ஆவது நிமிடத்தில் க்ரீஸ்மேனுக்கும், 35ஆவது நிமிடத்தில் ஆர்தூர் மேலோவிற்கும், 37ஆவது நிமிடத்தில் அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கும் வாய்ப்பு கிடைத்தன. ஆனால், மோசமான ஃபினிஷங்கால் அவற்றில் ஒன்றைக்கூட பார்சிலோனாவால் கோல் அடிக்க முடியாமல் போனது.

Griezmann
வாய்ப்பை நழுவவிட்ட சோகத்தில் க்ரீஸ்மேன்

இதில், ஆர்தூர் மேலோ, மெஸ்ஸி அடித்த ஷாட்டை ரியல் மாட்ரிட் அணியின் கோல்கீப்பர் திபாவுட் கோர்டியோஸ் சிறப்பாக தடுத்தார். இதனால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. இரண்டாம் பாதி தொடங்கியவுடன் பார்சிலோனா அணி அட்டாக்கிங் செய்து விளையாடியது. இதனால், பந்தை சரியாக பாஸ் செய்வதில் அந்த அணி தவறு செய்யத் தொடங்கியதை ரியல் மாட்ரிட் அணி சாதகமாக பயன்படுத்திகொண்டது.

இரண்டாம் பாதி - ரியல் மாட்ரிட்டின் கம்பேக்:

குறிப்பாக, 55ஆவது நிமிடம் முதல் 69ஆவது நிமிடம்வரை ரியல் மாட்ரிட் அணியிடம் பந்து இருந்தது. 56ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் இஸ்கோ அடித்த ஷாட், நிச்சயம் கோலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை பார்சிலோனா அணியின் கோல்கீப்பர் மார்க் ஆண்ட்ரே டெர்ஸ்டேகன் அற்புதமாக தடுத்தார்.

மீண்டும் 61ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ரைட் பேக் (தடுப்பாட்ட வீரர்) கர்வஹால் தந்த க்ரோஸை, இஸ்கோ ஹெட்டர் முறையில் கோல் அடிக்க முயற்சித்தார். மீண்டும் டெர்ஸ்கேன் அதை தடுத்தாலும், பந்தை கோல் லைனுக்குள் நுழையாதவாறு, பார்சிலோனா அணியின் சென்டர் பேக் (தடுப்பாட்ட வீரர்) பிக்கே பந்தை க்ளியர் செய்ததால் ஆட்டம் பரபரப்பான நிலைக்கு சென்றது.

Vinicus Junior
வினிஷியஸ் ஜூனியர்

இதையடுத்து, 69ஆவது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ஆர்துரோ விடாலுக்கு சப்ஸ்டியூட்டாக மார்டின் பிராத்வெயிட் களமிறங்கினார். வந்தவுடன் பந்தை முதல் டச்சிலேயே வேகமாக தட்டிச் சென்று கோல் வரை எடுத்துச் சென்றாலும், அவரால் கோல் அடிப்பதற்கோ அல்லது அசிஸ்ட் செய்வதற்கோ முடியாமல் போனது.

மெஸ்ஸியின் சாதனையை முறியடித்த ரியல் மாட்ரிட் வீரர்:

இந்த நிலையில், அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்ட ரியல் மாட்ரிட் அணி, கோல் அடிக்க மீண்டும் தீவிரம் காட்டியது. ரியல் மாட்ரிட் அணியின் நடுகள வீரர் டோனி க்ரூஸின் அற்புதமான பாஸை, பார்சிலோனாவின் ரைட் பேக் செமேடோ, ரைட் விங் பிராத்வெயிட் கணிக்கத் தவறினர். இதனால், தனக்கு கிடைத்த ஃப்ரீ ஸ்பேஸை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ரியல் மாட்ரிட் அணியின் ஃபார்வர்டு (லெஃப்ட் விங்) வீரர் வினிஷியஸ் ஜூனியர் கோல் அடித்து அசத்தினார்.

Vini
வினிஷியஸ் ஜூனியர்

இதன்மூலம், எல் கிளாசிகோ போட்டியில் இளம் வயதில் கோல் அடித்த வீரர் மெஸ்ஸியின் சாதனையை அவர் முறியடித்தார். மெஸ்ஸி தனது 19 வயது 259ஆவது நாட்களில் எல் கிளாசிகோ போட்டியில் கோல் அடித்த நிலையில், வினிஷியஸ் ஜூனியர் தனது 19 வயது 233ஆவது நாட்களில் கோல் அடித்து இச்சாதனையை முறியடித்தார்.

பார்சிலோனாவுக்கு மேலும் ஷாக் தந்த ரியல் மாட்ரிட்:

பின்னர், 75ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி பந்தை டி பாக்ஸுக்குள் எடுத்துச் சென்றபோது , ரியல் மாட்ரிட் அணியின் லெஃப்ட் பேக் வீரர் மார்செலோ அவரை சிறப்பாக டிஃபெண்டிங் செய்தார். இதன்பின், பார்சிலோனா அணிக்கு கோல் அடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு 82ஆவது நிமிடத்தில் ஃப்ரீகிக் மூலம் கிடைத்தது. மெஸ்ஸியின் துல்லியமான க்ராஸை பிக்கே ஹெட்டர் முறையில் கோல் அடிக்க தவறினார்.

Mariano
ரியல் மாட்ரிட் அணிக்காக இரண்டாவது கோலை அடித்த மரியானோ

ஆட்டம் 90 நிமிடங்களை எட்டிய நிலையில், ஸ்டாப்பேஜ் டைமாக மூன்று நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த சூழலில் ரியல் மாட்ரிட் அணியின் ஸ்ட்ரைக்கர் பென்சிமாவுக்கு சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கிய மரியோனா 91ஆவது நிமிடத்தில் கோல் அடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Real madrid
பார்சிலோனாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட்

இதனால், ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல்கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது. இதன்மூலம், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் அணி தனது சொந்த மண்ணில் பார்சிலோனாவிடம் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் ரியல் மாட்ரிட் அணி 56 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பார்சிலோனா அணி 55 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க: ஜீரோ டிகிரியில் கார்னர் கிக் கோல் அடித்த கேரள சிறுவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.