ரியல் மேட்ரிட் கால்பந்து அணிக்காக ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் ஈடன் ஹசார்ட். 28 வயதாகும் இவருடன் ரியல் மேட்ரிட் அணி ஐந்து வருட ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் கிரனடா அணிக்கு எதிராக முதல் முறையாக ரியல் மேட்ரிட் அணிக்கு களமிறங்கிய ஈடன் ஹசார்ட், முதல் கோலை அடித்து அசத்தினார். இதனை ஈடன் ஹசார்ட் ரசிகர்களும், ரியல் மேட்ரிட் ரசிகர்களும் கொண்டாடினர்.
இந்நிலையில் லா லிகா ட்விட்டர் பக்கத்தில் ஈடன் ஹசார்ட்டை ரியல் மேட்ரிட் அணிக்கு வரவேற்கும் விதமாக, ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய திரைப்படமான கல்லி ’பாய்’ படத்தில் வரும் ''ஆப்னா டைம் ஆயேகா'' என்ற பாடலின் முதல் வரியின் இறுதியில் ஆகயா என பயன்படுத்தியுள்ளனர்.
அதோடு ’கல்லி பாய்’ படத்தில் பலம் வாய்ந்த வரிகளை நாயகன் பாடுகையில், ''போத் ஹார்டு'' (boht hard) என்ற வசனமும் ரசிகர்களாலும், நண்பர்களாலும் பயன்படுத்தப்படும். அதனையும் ''boht ha(za)rd'' என இந்தியிலேயே பயன்படுத்தியது இந்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை இந்தியாவில் இருக்கும் ரியல் மேட்ரிட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: ரொனால்டோவோட சாதனையை முறியடிக்கனும்னா இனி ஐரோப்பாவுல ஒருத்தரு பிறக்கணும்