கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 1.30 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, உலகின் பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் பிரபல சிரி ஏ கால்பந்து கிளப்பான யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் டேனில் ருகானி, பிளேஸ் மட்டூடி ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தனர். மேலும் அந்த அணியின் அனைத்து வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டும், கோவிட்-19 கண்டறிதல் சோதனைக்கு உட்படுத்தும் முடிவையும் அணி நிர்வாகம் மேற்கொண்டிருந்தது.
-
. @DanieleRugani and @MATUIDIBlaise have recovered from Covid-19https://t.co/6i7mJlVpPy pic.twitter.com/HRJiS3CZgo
— JuventusFC (@juventusfcen) April 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">. @DanieleRugani and @MATUIDIBlaise have recovered from Covid-19https://t.co/6i7mJlVpPy pic.twitter.com/HRJiS3CZgo
— JuventusFC (@juventusfcen) April 15, 2020. @DanieleRugani and @MATUIDIBlaise have recovered from Covid-19https://t.co/6i7mJlVpPy pic.twitter.com/HRJiS3CZgo
— JuventusFC (@juventusfcen) April 15, 2020
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, இருவரும் தற்போது கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளதாக யுவென்டஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் கரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:ரிக்கி பாண்டிங் - தோனி இருவரும் ஒருமித்த பண்பை கொண்டவர்கள் - மைக்கேல் ஹஸ்ஸி!