உலகின் புகழ்பெற்ற கால்பந்து அணிகளுள் ஒன்று பார்சிலோனா எஃப்சி. இந்த அணியின் தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு, ஆறு இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தல் முடிவில், ஸ்பெயின் அரசியல்வாதியான ஜோன் லாபோர்டா, பார்சிலோனா அணியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து பார்சிலோனா அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பார்சிலோனா அணியின் தலைவர் தேர்தலில் மொத்தம் 55 ஆயிரத்து 611 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதில் ஜோன் லாபோர்டா 30 ஆயிர்தது 184 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தாண்டிற்கான பார்சிலோனா அணியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் முறையாக மின்னஞ்சல் மூலமும் நடத்தப்பட்டது. இதில் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகவே 20 ஆயிரத்து 633 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை மின்னஞ்சல் மூலம் செலுத்தினர்" என்று பதிவிட்டுள்ளது.
-
🗳 2021 ELECTION 🗳
— FC Barcelona (@FCBarcelona) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Joan Laporta, new president of FC Barcelona pic.twitter.com/W0Klb7d1Je
">🗳 2021 ELECTION 🗳
— FC Barcelona (@FCBarcelona) March 7, 2021
Joan Laporta, new president of FC Barcelona pic.twitter.com/W0Klb7d1Je🗳 2021 ELECTION 🗳
— FC Barcelona (@FCBarcelona) March 7, 2021
Joan Laporta, new president of FC Barcelona pic.twitter.com/W0Klb7d1Je
கடந்த 2003ஆம் ஆண்டு பார்சிலோனா அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜோன் லாபோர்டா, தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:அதிரடியில் மிரட்டிய பீட்டர்சன் - வங்கதேசத்தை அசால்ட் செய்த இங்கிலாந்து!