மகளருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணி, நார்வே அணியுடன் மோதியது.
இதைத்தொடர்ந்து, எந்த நேரத்தையும் வீணடிக்காமல் ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்திலேயே இங்கிலாந்து வீராங்கனை ஜில் ஸ்கோட் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதன்மூலம், இந்த தொடரில் குறைந்த நிமிடத்திலேயே முதல் கோலை பதிவு செய்த வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, 40ஆவது நிமிடத்தில் எலேன் ஓயிட் கோல் அடிக்க முதல் பாதி ஆட்டம் 2-0 என்ற கணக்கில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.
இதையடுத்து, 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்ட ஃப்ரீகிக்கை, அந்த அணியின் வீராங்கனை லூஸி பிரோன்ஸ் கோலா மாற்றி அச்ததினார். இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.