ETV Bharat / sports

தொடங்கியது 'யூரோ 2020' கால்பந்து திருவிழா: இத்தாலிக்கு முதல் வெற்றி

யூரோ 2020 கால்பந்து தொடரின் முதல் ஆட்டத்தில் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.

இத்தாலிக்கு முதல் வெற்றி
இத்தாலிக்கு முதல் வெற்றி
author img

By

Published : Jun 12, 2021, 7:16 PM IST

ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் 2020 யூரோ கால்பந்து போட்டித் தொடர் நேற்று(ஜூன் 11) தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் நடைபெறவிருந்த இத்தொடர் கோவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கபட்ட நிலையில், நேற்று தொடங்கியுள்ளது.

இத்தாலிக்கு முதல் வெற்றி

11 இடங்களில் இந்த போட்டித்தொடர் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் முதல் ஆட்டத்தில் இத்தாலி-துருக்கி ஆகிய அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய எட்டாவது நிமிடத்திலேயே இத்தாலிக்கு அதிர்ஷ்ட காற்று வீசியது.

இத்தாலி முன்கள வீரர் டோமினிக்கோ பிரரார்டி அடித்த ஷாட், துருக்கி வீரர் மெரிஹ் டெமிரல் உடலில் பட்டு இத்தாலி அணியின் கோல் போஸ்டுக்குள் விழுந்தது. இதையடுத்து ஓன் கோல் முறையில் இத்தாலிக்கு முதல் கோல் கிடைத்தது.

முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் இத்தாலி முன்னிலை வகித்த நிலையில், இரண்டாம் பாதியில் இத்தாலி ஆட்டத்தின் வேகத்தை தீவிரப்படுத்தியது. இதற்கான பலன் 66ஆவது நிமிடத்தில் கிட்டியது.

வெற்றிக் களிப்பில் இத்தாலி ரசிகர்கள்
வெற்றிக் களிப்பில் இத்தாலி ரசிகர்கள்

66வது நிமிடத்தில் இத்தாலியின் ஸ்ட்ரைகர் கைரோ இம்மொபைல் அடித்த ஷாட் கோலாக மாற 2-0 என்றக் கணக்கில் இத்தாலி முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் லோரென்சோ இன்சிக்னி அணிக்கு மூன்றாவது கோலை அடிக்க 3-0 என்றக் கணக்கில் இத்தாலி அபார வெற்றியை பெற்றது.

தொடரின் இரண்டாவது போட்டி வெல்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையே இன்று(ஜூன் 12) நடைபெறுகிறது.

இதையும் படிங்க: 'பேயர்ன் முனிச்' அணிக்கு ஆடத் தயாராகும் வங்காளச் சிறுவன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.