ETV Bharat / sports

யூரோ 2020: இறுதிப்போட்டியில் இத்தாலி; பெனால்டி வரை விறுவிறுப்பு

யூரோ 2020 கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி இத்தாலி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதிப்போட்டியில் இத்தாலி
இறுதிப்போட்டியில் இத்தாலி
author img

By

Published : Jul 7, 2021, 7:53 AM IST

லண்டன் (இங்கிலாந்து): ஐரோப்பாவின் முன்னணி அணிகள் மோதும் யூரோ கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று (ஜூலை 7) நள்ளிரவு 12.30 நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இத்தாலி அணிகள் மோதின.

முதல் பாதியில் 0-0

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக விளையாடின. ஆனால், இத்தாலி அணியை விட ஸ்பெயின் அணிதான் தொடர்ந்து கோல் கம்பத்தை நோக்கி தாக்குதல் நடத்தி கொண்டே இருந்தது. இருப்பினும், முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இரண்டாம் பாதியில் 1-1

இரண்டாம் பாதியில் 60ஆவது நிமிடத்தில் இத்தாலி தனது முதல் கோலை பதிவு செய்ய, அதற்கு பதிலடியாக ஸ்பெயின் 80ஆவது நிமிடத்தில் தனது கோலை பதிவு செய்தது. 90 நிமிடம், எக்ஸ்ட்ரா டைம் முழுவதும் முடிந்தும், இரு அணிகளும் கோல் அடிக்காததால் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டை நோக்கிச் சென்றது.

பெனால்டியில் வென்றது இத்தாலி

இதையடுத்து, பெனால்டி தொடங்கியது. இத்தாலி பெனால்டியை தொடங்க, முதல் ஷூட்டில் இரு அணிகளும் கோல்களை தவறவிட்டன. இரண்டாவது, மூன்றாவது ஷூட்டில் இரு அணிகளும் கோல்களை அடித்து 2-2 புள்ளிகளை பெற்றது.

இதன்பின், நான்காவது ஷூட்டில் இத்தாலி வெற்றிகரமாக கோல் அடிக்க, ஸ்பெயின் தனது நான்காவது ஷூட்டை வீணடித்தது. இதனால், 3-2 என்ற புள்ளிகளில் இத்தாலி முன்னிலை பெற, ஒரு கோல் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

ஐரோப்பாவே நடுங்கி கொண்டிருந்த நொடியில், இத்தாலி தனது ஐந்தாவது ஷூட்டில் கோல் அடித்து அலறவிட்டது.

அடுத்தது யார்?

இதன்மூலம் பெனால்டியில் 4-2 என்ற புள்ளிக் கணக்கில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி இத்தாலி அணி முதல் அணியாக யூரோ தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெற்றுள்ளது.

இந்திய நேரப்படி நாளை (ஜூலை 8) நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், டென்மார்க் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இதையும் படிங்க: HBD MSD: தோல்வியில் முளைத்தெழுந்த வெற்றியின் தலைவன் தோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.