ETV Bharat / sports

யூரோ 2020: பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இத்தாலி

author img

By

Published : Jul 3, 2021, 2:35 PM IST

யூரோ கால்பந்து தொடர் காலிறுதிப் போட்டியில் இத்தாலி அணி பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Italy beat Belgium
Italy beat Belgium

ஐரோப்பாவின் முன்னணி அணிகள் பங்கேற்கும் யூரோ 2020 கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில் இத்தாலி அணி பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது.

இத்தாலி முன்னிலை

இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் ஆரம்பம் முதலே சூடு பிடித்தது. ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் நிகோலோ பரேலா அணிக்கு முதல் கோலை தேடித்தந்தார்.

பின்னர் 44ஆவது நிமிடத்தில் இத்தாலி வீரர் லோரன்சோ அணிக்கு இரண்டாவது கோலை அடிக்க இத்தாலி அணி 2-0 என்று முன்னிலைப் பெற்றது.

பெல்ஜியம் அணியும் அவ்வளவு எளிதாக இத்தாலிக்கு வெற்றியை தந்துவிடவில்லை. இத்தாலி இரண்டாவது கோல் அடித்த சில நிமிடங்களிலேயே பெல்ஜியம் வீரர் ரோமேரு லுகாகுவுக்கு பென்ல்டி வாய்ப்பு கிடைத்தது.

கோல் இல்லாத 2ஆவது பாதி

அதை அவர் கோலாக மாற்ற பெல்ஜியம் முதல் கோலை பெற்றது. முதல் பாதியில் 2-1 என இத்தாலிக்கு முன்னிலை கிடைத்த நிலையில், இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க பகீரத முயற்சி செய்தனர்.

இருப்பினும், இரு அணிகளாலும் மேலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின்- இத்தாலி அணிகள் மோதுகின்றன.

இதையும் படிங்க: யூரோ 2020: காலிறுதிப்போட்டியில் ஸ்பெயின் போராடி வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.