இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி, புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
பாம்போலியத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பு சீசனின் பலம் நிறைந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மும்பை சிட்டி எஃப்சி
நடப்பு சிசனில் மும்பை சிட்டி எஃப்சி அணி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 8 போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியை டிராவிலும், ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவி 25 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் உள்ளது.
-
All set for tomorrow's crunch clash!💥#MCFCHFC #AamchiCity 🔵 pic.twitter.com/1MaquWTH8Z
— Mumbai City FC (@MumbaiCityFC) January 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All set for tomorrow's crunch clash!💥#MCFCHFC #AamchiCity 🔵 pic.twitter.com/1MaquWTH8Z
— Mumbai City FC (@MumbaiCityFC) January 15, 2021All set for tomorrow's crunch clash!💥#MCFCHFC #AamchiCity 🔵 pic.twitter.com/1MaquWTH8Z
— Mumbai City FC (@MumbaiCityFC) January 15, 2021
தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை சிட்டி எஃப்சி அணி நடப்பு சீசனில் நிச்சயம் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ஹைதராபாத் எஃப்சி
கடந்த ஐஎஸ்எல் சீசனில் அறிமுகமான ஹைதராபாத் எஃப்சி அணி, இந்த சீசனின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 4 வெற்றி, 3 தோல்வி, 3 போட்டிகளை டிராவில் முடித்துள்ளது. இதன்மூலம் 15 புள்ளிகளைப் பெற்று ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
-
All 👀 on #MCFCHFC!#LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/NTAFNc0wo3
— Hyderabad FC (@HydFCOfficial) January 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All 👀 on #MCFCHFC!#LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/NTAFNc0wo3
— Hyderabad FC (@HydFCOfficial) January 15, 2021All 👀 on #MCFCHFC!#LetsFootball #HarKadamNayaDum #HydKeHainHum #HyderabadFC 💛🖤 pic.twitter.com/NTAFNc0wo3
— Hyderabad FC (@HydFCOfficial) January 15, 2021
இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்று ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனா பரிசோதனைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற தென் ஆப்பிரிக்க அணி!