கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கோவாவின் மூன்று மைதானங்களில் மட்டும் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்துவருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சீசனில் தோல்வியை கண்டிராத பெங்களூரு எஃப்சி அணியும் - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் நேருக்கு நேர் மோதவுள்ளனர். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் தோல்வியை சந்திக்காத இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பெங்களூரு எஃப்சி:
சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணி நடப்பு சீசனில் இதுவரை பங்கேற்றுள்ள மூன்று லீக் போட்டிகளில் ஒன்றில் வெற்றியையும், இரண்டு போட்டிகளில் டிராவிலும் முடித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது வெற்றியை தக்கவைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நார்த் ஈஸ்ட் யுனைடெட்:
நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் நடப்பு சீசனில் பங்கேற்ற 4 லீக் போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா என புள்ளிப்பட்டியலின் மூன்றாமிடத்தில் உள்ளது. வலிமையான அட்டாக்கிங் வீரர்களைக் கொண்டுள்ள நார்த் ஈஸ்ட் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அசத்தும் என அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க:ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலியின் இடத்தை பிடித்த வில்லியம்சன்!