ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது களைக்கட்டத் தொடங்கியுள்ளன. பாம்போலியத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் 3ஆவது நிமிடத்திலேயே மும்பை சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனைப் பயன்படுத்திய ஆடம், கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹ்யூகோ போமஸ் ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவின்போது மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலிமையான நிலையில் இருந்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி தனது டிஃபென்ஸை வலிமைப்படுத்தியது. இதன் காரணமாக கேரளா பிளாஸ்டர்ஸ் அணி கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் சின்னாபின்னமானது.
-
A super performance from #TheIslanders to start 2️⃣0️⃣2️⃣1️⃣ on the right note! 💙#MCFCKBFC #AamchiCity 🔵 pic.twitter.com/FAWGf2VeUs
— Mumbai City FC (@MumbaiCityFC) January 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A super performance from #TheIslanders to start 2️⃣0️⃣2️⃣1️⃣ on the right note! 💙#MCFCKBFC #AamchiCity 🔵 pic.twitter.com/FAWGf2VeUs
— Mumbai City FC (@MumbaiCityFC) January 2, 2021A super performance from #TheIslanders to start 2️⃣0️⃣2️⃣1️⃣ on the right note! 💙#MCFCKBFC #AamchiCity 🔵 pic.twitter.com/FAWGf2VeUs
— Mumbai City FC (@MumbaiCityFC) January 2, 2021
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 19 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும் தக்கவைத்துக்கொண்டது.
இதையும் படிங்க: மீண்டும் பயிற்சிக்கு திரும்பும் இந்திய ஹாக்கி அணி!