இந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு எஃப்சி அணி, கொல்கத்தாவின் ஏடிகே அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணிக்கு டிமாஸ் டெல்கடோ (Dimas Delgado) ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து அந்த அணியின் கெவாகன் ஃப்ரேட்டர் (Kevaughn Frater) ஆட்டத்தின் 35ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
ஆனால் தொடர்ந்து போராடிய ஏடிகே அணியால் முதல் பாதி ஆட்டத்தில் கோலேதும் அடிக்க இயலவில்லை. இதன்மூலம் பெங்களூரு எஃப்சி அணி 2-0 என்ற கணக்கில் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே தன்வசப்படுத்தியது.
அதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணியின் கார்சியா ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்திலும், மைக்கல் சூசைராஜ் ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து பெங்களூரு அணிக்கு அதிர்ச்சியளித்தனர்.
-
.@ATKFC fight back from 2⃣ goals down to nick a point against @bengalurufc! #BFCATK #HeroISL #LetsFootball pic.twitter.com/Iw8HpXMLxm
— Indian Super League (@IndSuperLeague) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@ATKFC fight back from 2⃣ goals down to nick a point against @bengalurufc! #BFCATK #HeroISL #LetsFootball pic.twitter.com/Iw8HpXMLxm
— Indian Super League (@IndSuperLeague) February 22, 2020.@ATKFC fight back from 2⃣ goals down to nick a point against @bengalurufc! #BFCATK #HeroISL #LetsFootball pic.twitter.com/Iw8HpXMLxm
— Indian Super League (@IndSuperLeague) February 22, 2020
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இரு அணியும் தலா இரு கோல்களை அடித்ததன் மூலம் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. மேலும் கொல்கத்தாவின் ஏடிகே, பெங்களூரு எஃப்சி அணிகள் ஏற்கனவே இந்த சீசனுக்கான அரையிறுதிப்போட்டிக்கு தகுதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலாவது ஒருநாள்: இறுதி ஓவரில் திரில் வெற்றிபெற்ற இலங்கை!