கரோனா பாதுகாப்பு சூழலுடன் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - எஃப்சி கோவா அணியை எதிர்கொள்கிறது.
ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னையின் எஃப்சி:
நடப்பு ஐஎஸ்எல் தொடரில் சென்னை அணி இதுவரை ஐந்து லீக் போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியையும், இரண்டு போட்டிகளில் டிராவிலும், இரண்டு போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது.
-
🏃#AllInForChennaiyin #FCGCFC pic.twitter.com/z6u7nTHVQ7
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) December 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🏃#AllInForChennaiyin #FCGCFC pic.twitter.com/z6u7nTHVQ7
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) December 18, 2020🏃#AllInForChennaiyin #FCGCFC pic.twitter.com/z6u7nTHVQ7
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) December 18, 2020
இதன்மூலம் ஐஎஸ்எல் தரவரிசைப் பட்டியலில் ஐந்து புள்ளிகளுடன் எட்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இனிவரும் லீக் போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
எஃப்சி கோவா:
இந்தாண்டு ஐஎஸ்எல் தொடரில் எஃப்சி கோவா அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில், 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளைச் சந்தித்து, 8 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.
-
The Gaurs are looking forward to getting back to winning ways when they meet @ChennaiyinFC on Saturday. 🙌🏻#RiseAgain #FCGCFC pic.twitter.com/2Yjofr4u3T
— FC Goa (@FCGoaOfficial) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Gaurs are looking forward to getting back to winning ways when they meet @ChennaiyinFC on Saturday. 🙌🏻#RiseAgain #FCGCFC pic.twitter.com/2Yjofr4u3T
— FC Goa (@FCGoaOfficial) December 17, 2020The Gaurs are looking forward to getting back to winning ways when they meet @ChennaiyinFC on Saturday. 🙌🏻#RiseAgain #FCGCFC pic.twitter.com/2Yjofr4u3T
— FC Goa (@FCGoaOfficial) December 17, 2020
தனது சொந்த மைதானத்தில் விளையாடும் கோவா அணி, இனி வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா!