ஐஎஸ்எல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியை எதிர்த்து எஃப்.சி. கோவா அணி ஆடியது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் கோவா அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் ஹியூகோ பவுமஸ் (Hugo Boumous) கோவா அணிக்காக முதல் கோல் அடித்து கணக்கைத் தொடங்கினார். இதையடுத்து இரு அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. அதனால் 1-0 என்ற கோவா அணியின் முன்னிலையுடன் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பின்னர் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மீண்டும் ஹியூகோ இரண்டாவது கோலை அடிக்க, கோவா அணி 2-0 என்று முன்னிலையுடன் தொடர்ந்தது. தொடர்ந்து 64ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை அந்த அணியின் மர்சிலினோ (marcelinho) பயன்படுத்தி ஹைதராபாத் அணிக்காக முதல் கோல் அடிக்க ஆட்டம் 2-1 என்று பரபரப்பானது.
ஆனால் இந்த பரபரப்பிற்கிடையே கோவா அணியின் கோரொமின்ஸ் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். அதையடுத்து ஹைதராபாத் அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட்டன.
ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதனை கோரொமின்ஸ் இரண்டாவது கோலை அடித்து 4-1 என்ற நிலையை ஏற்படுத்தினார். அதையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் பாதி நேர முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் எஃப்.சி. கோவா அணி வெற்றிபெற்றது.
-
Boumous' brace ➕ Coro's brace ➡️ Qualification secured ✅
— Indian Super League (@IndSuperLeague) February 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's our #ISLRecap of a commanding @FCGoaOfficial win at the Fatorda! 🧡
Full highlights 👉 https://t.co/hJDgMQZoNk#FCGHFC #HeroISL #LetsFootball pic.twitter.com/edNwFvrSTq
">Boumous' brace ➕ Coro's brace ➡️ Qualification secured ✅
— Indian Super League (@IndSuperLeague) February 5, 2020
Here's our #ISLRecap of a commanding @FCGoaOfficial win at the Fatorda! 🧡
Full highlights 👉 https://t.co/hJDgMQZoNk#FCGHFC #HeroISL #LetsFootball pic.twitter.com/edNwFvrSTqBoumous' brace ➕ Coro's brace ➡️ Qualification secured ✅
— Indian Super League (@IndSuperLeague) February 5, 2020
Here's our #ISLRecap of a commanding @FCGoaOfficial win at the Fatorda! 🧡
Full highlights 👉 https://t.co/hJDgMQZoNk#FCGHFC #HeroISL #LetsFootball pic.twitter.com/edNwFvrSTq
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதால் இந்த ஆண்டின் ப்ளே -ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 10 வெற்றி, 3 டிரா, 3 தோல்வியுடன் 33 புள்ளிகளைப் பெற்று எஃப்.சி. கோவா அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாலத்தீவில் பானிப்பூரி விற்கும் தோனி!